ராணுவ வீரர் வீட்டில் நகை திருட்டு

ராணுவ வீரர் வீட்டில் நகை திருடியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update:2023-05-26 01:39 IST

மானூர்:

மானூர் வசந்த்நகரைச் சேர்ந்தவர் கோபால் (வயது 42). ராணுவ வீரரான இவர் கடந்த 23-ந் தேதி வெளியூரில் உள்ள தனது உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ளவதற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றுள்ளார். திரும்பிவந்து பார்த்தபோது, வீட்டின் முன்வாசல் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோபால் மானூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்