3 வீடுகளில் நகை-பணம் திருட்டு

3 வீடுகளில் நகை-பணம் திருட்டுபோனது.

Update: 2023-01-18 20:18 GMT

திருச்சி கருமண்டபம் நியூசெல்வ நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ராயர் (வயது 65). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது அவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, ரூ.25 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் செசன்சு கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் திருச்சி, கே.கே.நகர் சுந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுரளி. இவரது மனைவி அஷ்ரப்பேகம்(40). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு அவருடைய தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. மேலும் வீட்டில் பீரோவில் இருந்த 1½ பவுன் நகை மற்றும் ரூ.2 ஆயிரம் திருட்டு போயிருந்தது.

மேலும் சுந்தர நகர் 2-வது தெருவை சேர்ந்த எடிசன்(வயது 36) வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வேளாங்கண்ணி சென்று இருந்தார். இந்நிலையில் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அறையில் இருந்த 1¼ பவுன் நகை மற்றும் ரூ.1,500-ஐ மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

துறையூரில் திருச்சி மெயின்ரோட்டில் வசித்து வருபவர் மணிகண்டன்(39) இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். பின்னர் திரும்பி பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு மற்றும் வீட்டில் இருந்த இரும்பு பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இது குறித்த புகாரின்பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்