பெண்ணாடத்தில்தொழிலாளி வீட்டில் நகை-பணம் திருட்டு

பெண்ணாடத்தில் தொழிலாளி வீட்டில் நகை-பணம் திருடு போனது.;

Update:2023-07-12 00:15 IST


பெண்ணாடம், 

பெண்ணாடம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தனவேல்(வயது 53). இவர், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது வீட்டில் மனைவி சுமதி, அவரது மகள் ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் சுமதி, தனது மகளை அழைத்துக்கொண்டு திட்டக்குடியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை காணவில்லை. வீட்டில் இருந்தவர்கள் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், நகை-பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்