மரத்தில் ஜீப் மோதி வாலிபர் படுகாயம்

கூடலூர் அருகே மரத்தில் ஜீப் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-04-04 18:45 GMT

கூடலூர்

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பாரதி நகரில் இருந்து ஆரோட்டுப்பாறைக்கு ஜீப் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. ஜீப்பை ரகு (வயது 19) என்பவர் ஓட்டினார். அவர் அதிவேகமாக ஜீப்பை ஓட்டியதாக கூறப்படுகிறது. இதில், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் ஜீப் மோதியது. இதில் ரகு பலத்த காயமடைந்தார். மேலும் அவருடன் சென்ற நண்பர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அவர் பெயர் விவரம் தெரியவில்லை. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து ஜீப் பலத்த சேதம் அடைந்தது. இது குறித்து நியூகோப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்