ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
சங்கரன்கோவில், டிச.6-
சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். ஏ.வி.கே. கல்வி குழும தலைவர் டாக்டர் அய்யாத்துரை பாண்டியன், தகவல் தொழில்நுட்ப அணி மண்டலத் துணைச் செயலாளர் சிவானந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு ஏராளமான அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.