ஜப்பான் நாட்டு முறையில் 500 மரக்கன்றுகள் நடவு

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஜப்பான் நாட்டு முறையில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.

Update: 2023-02-26 18:44 GMT

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஜப்பான் நாட்டு முறையில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.

மியாவாக்கி முறை

ஜப்பான் நாட்டில் 'மியாவாக்கி' என்ற முறையில் மரக்கன்றுகள் நடவு செய்யும் முறை உள்ளது. இது இடைவெளி இல்லா அடர் காடு என்ற தத்துவத்தின்படி, வெவ்வேறு ரக மரக்கன்றுகளை ஒரே இடத்தில் நடவு செய்வதுதான் இதன் அடிப்படை நோக்கமாகும். குறிப்பிட்ட இடத்தில் ஆழமான குழிகள் தோண்டி அதில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடும் முறையை 'மியாவாக்கி' என்று அழைக்கின்றனர்.

இதன் மூலமாக அந்த நிலத்தின் வெப்ப நிலை குறையவும், காற்றின் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், பறவைகள் வாழ்விடமாகவும், பல்லுயிர் சூழல் உருவாக உதவுகிறது. மேலும் இதன் சிறப்பம்சம் வெவ்வேறு வகையான மரங்கள் நடும்போது மரங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து போட்டி போட்டு குறுகிய காலத்தில் அதிகப்படியான வளர்ச்சியை தருகிறது.

சூப்பிரண்டு அலுவலகம்

அந்த வகையில் பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் உள்ள நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்திலும் 'மியாவாக்கி' முறையில் மரக்கன்றுகள் நடவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேற்று காலை தொடங்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றினார். இதில் ஈட்டி, வேங்கை, புங்கை, வேம்பு, செம்மரம், இலுப்பை, நீர்மருது வகையான 500 மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்