வக்கீல்கள் நல நிதி ரூ.5 ஆயிரம் செலுத்தினால் ஜாமீன்

வக்கீல்கள் நல நிதி ரூ.5 ஆயிரம் செலுத்தினால் ஜாமீன் வழங்குவதாக மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-07-24 18:33 GMT


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் தமீம் அன்சாரி. இவர் கடந்த மாதம் 17-ந்தேதி அதே பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் அத்துமீறி நுழைந்து, கத்தியை காட்டி கடைக் காரரை மிரட்டி உள்ளார். மேலும் கடையின் கண்ணாடிகளை உடைத்து உள்ளார். இதுகுறித்து கடைக்காரர் அளித்த புகாரின்பேரில் கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தமீம் அன்சாரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவர் தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளிசங்கர், மதுரை ஐகோர்ட்டு வக்கீல்கள் நல நிதியாக, இங்குள்ள வங்கியில் ரூ.5 ஆயிரத்தை செலுத்த வேண்டும். அதற்கான ரசீதை கும்பகோணம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சமர்ப்பித்து ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்