ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்ததையடுத்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பட்டாசு ெவடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் மனுக்களை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, ஜல்லிக்கட்டை நடத்தலாம் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பட்டாசு வெடித்ததுடன், இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளரும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினருமான க.சொ.க.கண்ணன் தலைமையில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு பெற்று கொடுத்ததற்காக தமிழக அரசுக்கு அவர்கள் நன்றி தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். நிகழ்ச்சியில் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.