ராகுல்காந்திக்கு சிறை தண்டனை தீர்ப்பு: சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

ராகுல்காந்திக்கு சிறை தண்டனை தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2023-03-24 08:20 GMT

பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசிய வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட் நேற்று தீர்ப்பு அளித்தது. இதை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் துணைத்தலைவர்கள் ஆ.கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் மற்றும் தளபதி பாஸ்கர், சூளை ராஜேந்திரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டில்லிபாபு தலைமையில் பெரம்பூர் ெரயில் நிலையம் எதிரே காங்கிரஸ் கட்சியினர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் போரூர் ரவுண்டானா, ராயபுரம் எஸ்.என்.செட்டி தெருவிலும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்