சிறை உதவி அலுவலர் போட்டி தேர்வு
சிறை உதவி அலுவலர் போட்டி தேர்வு பெரம்பலூரில் 2 மையங்களில் நடந்தது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 59 உதவி சிறை அலுவலர் காலிப்பணியிடங்களுக்கு கணினி வழியாக ஆன்லைன் கொள்குறி வகை போட்டி தோ்வு நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த தேர்வினை எழுத மொத்தம் 221 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு தேர்வு எழுத மையங்களாக பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியும், ரோவர் பொறியியல் கல்லூரியும் ஒதுக்கப்பட்டன. தேர்வாளர்கள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வையும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வையும் எழுதினர்.