தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2024-01-30 07:18 GMT

சென்னை, 

கடந்த 7ஆம் தேதி சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதில் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 30-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம், பிப்.5 முதல் பிப் 9ம் தேதி வரை அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோருவது, பிப்.10ல் மாவட்ட அளவில் வேலைநிறுத்த போராட்டம் ஆயத்த மாநாடு ஆகியவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிப். 15-ம் தேதி முதல் ஒரு நாள் அடையாள போராட்டம் நடத்தப்போவதாகவும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் தஞ்சையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் திரண்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து, பிப்ரவரி 15 ஆம் தேதி மாவட்ட அளவில் ஒரு நாள் ஆயத்த போராட்டமும், பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டமும் நடத்த உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்