காங்கயம் பகுதியில் சாரல் மழை கொப்பரை தேங்காய் உலர்த்தும் பணிகள் பாதிப்பு
காங்கயம் பகுதியில் சாரல் மழை கொப்பரை தேங்காய் உலர்த்தும் பணிகள் பாதிப்பு
காங்கயம்
தென்மேற்கு பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் அடித்தது. பின்னர் மதியம் லேசான மழை தூரல் போடத்தொடங்கிய நேரம் செல்லச்செல்ல சற்று அதிகளவில் தூரல்போடத்தொடங்கியது. மதியம் முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சாரல் மழை தொடர்ந்தது. இதனால் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் தேங்காய் உடைத்து, உலர்த்தும் உலர் களங்களில் பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டது. ஏற்கனவே உடைத்து களத்தில் உலர வைக்கப்பட்டிருந்த தேங்காய் பருப்பு குவியல்களுக்கு தார்ப்பாய் போட்டு மூடி வைத்திருந்தனர். இதனால் நேற்று தேங்காய் உடைத்து உலர்த்தும் களத்தில் நடைபெறும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.