வருகிற 15-ந் தேதி நடைபெறவுள்ள ம.தி.மு.க. மாநாட்டுக்கான பந்தல் அமைக்கும் பணிகள் தொடக்கம்

வருகிற 15-ந் தேதி நடைபெறவுள்ள ம.தி.மு.க. மாநாட்டுக்கான பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கியது

Update: 2023-09-02 22:13 GMT


மதுரை வலையங்குளத்தில் வருகிற 15-ந் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ம.தி.மு.க. சார்பில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர். மாநிலம் முழுவதும் இருந்து திரளான ம.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். வலையங்குளத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளை நேற்று பூமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் வலையங்குளம் பகுதியில் உள்ள கருப்பசாமி கோவிலில் சாமி கும்பிட்டு, அதனைத் தொடர்ந்து மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார், இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மார்நாடு, தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன், அவைத் தலைவர் சுப்பையா, பொருளாளர் சுருதி ரமேஷ். உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்