விமர்சனங்களுக்கு செயல்பாடுகளால் பதிலடி கொடுத்தவர் உதயநிதி - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அமைச்சர் பொறுப்பில் உதயநிதி சிறப்பாக செயல்பட்டு துறைகளை மேம்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என கூறினார்.
திருச்சி,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைத்தும் வருகிறார்.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் இன்று 3 இடங்களில் நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் காலை 9.30 மணிக்கு திருச்சி வருகை தந்தார். அவருடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வந்தார்.
தொடர்ந்து திருச்சியில் ரூ.655 கோடி மதிப்பீட்டில் 5,639 புதிய திட்டப்பணிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதன் பின்னர் நேரு உள் விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசினார் . அப்போது அவர் உதயநிதி ஸ்டாலின் குறித்து பாராட்டினார்.
அவர் பேசியதாவது ,
உதயநிதி அமைச்சரவைக்கு தான் புதியவர் உங்களுக்கு அல்ல. அவர் அமைச்சராக பொறுப்பேற்ற போது மட்டுமல்ல, சட்டமன்றத்தில் உறுப்பினராக பொறுப்பேற்ற போதும் விமர்சனங்கள் வந்தது. அதற்கு தன் செயல்பாடுகள் மூலம் பதிலளித்தார். உதயநிதிக்கு இளைஞர்கள் நலன், விளையாட்டு, சிறப்பு திட்டகள் செயலாக்கத்துறை போன்ற முக்கிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சர் பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு இந்த துறைகளை மேம்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என கூறினார்.