பண்ருட்டியில் பதுக்கி வைத்திருந்த 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் 3 பேர் மீது வழக்கு
பண்ருட்டியில் பதுக்கி வைத்திருந்த 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பண்ருட்டி அருகே அவியனூர் வங்கித்தெருவை சேர்ந்த ஒருவரது காலி இடத்தில் 40 கிலோ எடை கொண்ட 63 மூட்டைகளில் மொத்தம் 2,520 கிலோ ரேஷன் அரிசியை 3 பேர் பதுக்கி அடுக்கி வைத்திருப்பதாக பண்ருட்டி குடிமை பொருள் ஆய்வாளர் வீரசேகரனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவரது தலைமையிலான குழு வினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது இவர்களை பார்த்ததும் அவர்கள் 3 பேர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இதையடுத்து 2,520 கிலோ (2½ டன்) ரேஷன் அரிசியை அவர்கள் பறிமுதல் செய்து, அவற்றை கடலூர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி, ஏட்டுகள் முருகானந்தம், ராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி சென்ற 3 பேர் யார்?, அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்று தீவிரமாக விசாரணை நடத்தினர்.