கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2022-08-14 18:15 GMT

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற பள்ளி சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்க சிறப்பு கூட்டம், மாநில தலைவர் லூயிஸ் பிரான்சிஸ் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தை ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு விரிவுபடுத்த வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சேமநல நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், சமூக நலத்துறை இயக்கத்திலேயே பணியாற்றக்கூடிய அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். சேமநல நிதியை உடனடியாக வழங்க வேண்டும். ரூ.72 ஆயிரத்திற்கு கீழ் ஆண்டு ஊதியம் பெறக்கூடிய அனைவரையும் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 29-ந் தேதி அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்