என்எல்சியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது - டிடிவி தினகரன்

என்எல்சியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.;

Update:2022-07-28 14:32 IST

சென்னை,

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்களில் ஒருவர்கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்களில் ஒருவர்கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டின் வளத்தை எடுத்து தொழில் நடத்தும் பொதுத்துறை நிறுவனம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைப் புறக்கணிப்பது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. உடனடியாக புதிய பொறியாளர் தேர்வு பட்டியலை ரத்துசெய்துவிட்டு என்எல்சிக்கு இடம் கொடுத்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த தகுதியுள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாய்ப்பு வழங்கவேண்டும்.

என்எல்சி நிறுவனம் தொடர்ச்சியாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைப் புறக்கணிக்கும் நிலைப்பாட்டை எடுத்தால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் களத்தில் இறங்கி போராடும்" என்று கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்