தேசிய கல்விக் கொள்கை திட்டம் சுமூகமாக நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
தேசிய கல்விக் கொள்கை திட்டம் சுமூகமாக நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது என கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.;
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
தேசிய கல்விக் கொள்கை திட்டம் சுமூகமாக நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. கல்வியில் மிகப்பெரிய மறுமலர்ச்சி மற்றும் புரட்சியை பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ளார்.
பிரதமரின் பார்வையில் இந்தியா ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற இலக்கை நோக்கி உள்ளது. ஆங்கிலேயர்கள், ஐரோப்பியர்கள் என பலர் நமது பெருமையை அழித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.