ஐ.டி. ஊழியரை மிரட்டிய 4 பேர் மீது வழக்கு

ஐ.டி. ஊழியரை மிரட்டிய 4 பேர் மீது வழக்கு

Update: 2023-08-16 18:45 GMT

ராஜாக்கமங்கலம்:

வெள்ளிச்சந்தை அருகே கொல்லமாவடியை சேர்ந்தவர் ராகவன். இவருடைய மகன் சுகுமார் (வயது 39). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கொல்லமாவடி மாசான சாமி கோவில் அருகே சொந்தமாக நிலம் உள்ளது. இந்த நிலத்தில் பாதைக்காக இடத்தை சமன்படுத்த சுகுமார் அதிக இடத்தை எடுத்ததாக கூறப்படுகிறது. அங்கு காம்பவுண்டு சுவர் கட்டிய பின்பு அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் சங்கர் (36), ஸ்ரீதரன், நாகலிங்கம், சுயம்புலிங்கம் ஆகியோர் சுகுமாரிடம் பிரச்சினை செய்துள்ளனர். இதனால் நில அளவையரை கொண்டு சம்பந்தப்பட்ட நிலத்தை அளந்து பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம் என இரு தரப்பினரும் சுமூகமாக பேசி முடிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சுகுமார் காம்பவுண்டு சுவரை தண்ணீர் ஊற்றி நனைப்பதற்கு சென்றுள்ளார். அப்போது மேற்கூறிய 4 பேரும் கடப்பாறை மற்றும் மண் வெட்டியால் காம்பவுண்டு சுவரை இடித்ததாக தெரிகிறது. இதனை சுகுமார் தட்டிக்கேட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் சோ்ந்து சுகுமாரை தகாத வார்த்தையால் பேசி மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சுகுமார் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கார்த்திக் சங்கர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்