இஸ்ரோ மைய ஊழியர் விபத்தில் பலி
வள்ளியூரில் மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் இஸ்ரோ மைய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூரில் மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் இஸ்ரோ மைய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
இஸ்ரோ மைய ஊழியர்
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் மாயாண்டி மகன் சுப்பிரமணியன் (வயது 38). இவர் பணகுடி மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள பவர் பிளாண்டில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் சுப்பிரமணியன் வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
பரிதாப சாவு
இதில் சுப்பிரமணியன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வள்ளியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ேமாட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் இஸ்ரோ மைய ஊழியர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.