இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி ஆண்டு விழா
தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியின் 9-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர் விஞ்ஞானி சிவன் தலைமை தாங்கினார். பல்வேறு பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறந்த பள்ளிக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளியின் நிறுவன தலைவர் இசக்கி சுப்பையா ஆலோசனையின் பேரில் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளியின் நிர்வாக இயக்குனர் இசக்கிதுரை முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் மோனிகா டிசோசா வரவேற்று பேசினார். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் பள்ளி அலுவலக இயக்குனர் ராம்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.