மனு கொடுக்க வந்தவர்களை தலையில் அடித்து விரட்டுவது தான் திராவிட மாடலா? - டிடிவி தினகரன்
மனு கொடுத்த பெண்ணை, அமைச்சர் தலையில் அடித்து விரட்ட முனைந்திருப்பது கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.;
சென்னை,
கோரிக்கையை நிறைவேற்றித்தரக் கேட்டு மனு கொடுத்த பெண்ணை, தமிழக வருவாய் துறை அமைச்சர் தலையில் அடித்து விரட்ட முனைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "கோரிக்கையை நிறைவேற்றித்தரக் கேட்டு மனு கொடுத்த பெண்ணை, தமிழக வருவாய் துறை அமைச்சர் தலையில் அடித்து விரட்ட முனைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அந்தக் காணொளியை பார்த்த போது, ஓர் அமைச்சரே இப்படி நடந்து கொண்டால் மக்கள் எப்படி முன்வந்து ஆட்சியாளர்களிடம் குறைகளைத் தெரிவிப்பார்கள்?
தி.மு.க அரசின் அமைச்சர்கள், அதிகாரிகளை சாதிப் பெயர் சொல்லி திட்டுவதும், மனு கொடுக்க வந்தவர்களை தலையில் அடித்தி விரட்டுவதும்தான் மேடைக்கு மேடை திரு.ஸ்டாலின் முழங்கி வரும் திராவிட மாடல் போலும்!?" என்று கூறியுள்ளார்.