பாசன நீரை பயன்படுத்துவோர் சங்க தேர்தல்
பாசன நீரை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடைபெற்றது.;
விராலிமலை தாலுகா பொன்னணியாறு உப வடிநில நீர் பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் மற்றும் உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலானது கடந்த 9-ந் தேதி நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு 18 பேரும், உறுப்பினர் பதவிக்கு 53 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 2 குளங்களுக்கு தலைவர் பதவிக்கான வேட்புமனுவை அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர். மீதமுள்ள குளங்களுக்கு வேட்புமனு பரிசீலனையானது 12-ந் தேதி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலானது கொடும்பாளூர், விட்டமாபட்டி, தென்னம்பாடி, கத்தலூர், பேராம்பூர், செங்களாக்குடி, மதயானைபட்டி, குன்னத்தூர் ஆகிய 8 குளங்களுக்கு தலைவர் பதவிக்கு 20 பேரும், வேலூர், கல்குடி, ஆவூர் ஆகிய 3 குளங்களுக்கு உறுப்பினர் பதவிக்கு 11 பேரும் போட்டியிட்டனர். இதற்கான தேர்தலின் முடிவில் 8 குளங்களுக்கு தலைவரும், உறுப்பினர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பின்னர் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியருமான தெய்வநாயகி சான்றிதழ்களை வழங்கினார்.