பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி

பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி

Update: 2022-05-29 16:57 GMT

வாய்மேடு:

தலைஞாயிறு ஒன்றிய பகுதிகளில் நடந்து வரும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளையும், ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து வரும் பணிகளையும் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக உம்பளச்சேரி ஊராட்சியில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி, நத்தபள்ளம் ஊராட்சியில் நடந்து வரும் பணி ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர்கள் ரவி, ரவிச்சந்திரன், சாந்தி நடராஜசுந்தரம் மற்றும் துணைத்தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர். புத்தூர் ஊராட்சி ஓடாச்சேரி பகுதியில் ரூ.3.60 லட்சத்தில் நடந்து வரும் சாலை அமைக்கும் பணியினை வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்