பொங்கல் பண்டிகை, ரயில் டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன

வரும் பொங்கல் பண்டிகைக்காக டிக்கெட் முன் பதிவு இன்று (செப். 15) தொடங்கியது.

Update: 2022-09-15 08:41 GMT

கோப்புப் படம்

சென்னை,

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வதை சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். வரும் பொங்கல் பண்டிகைக்காக டிக்கெட் முன் பதிவு இன்று (செப். 15) தொடங்கியது. ஆனால், இந்த டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே முடிந்தன. இதனால் பயணிகள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.

2023 -ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 ஆம் தேதி காணும் பொங்கலையொட்டித் தொடர்ந்து அரசு விடுமுறை விடப்படுகிறது.

ரெயில் பயணத்துக்காக, 120 நாள்களுக்கு முன்னதாகவே ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுன்ட்டா்கள், ஐஆா்சிடிசி இணையதளம் வழியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். இதன்படி, ஜனவரி 13 ஆம் தேதி பயணத்துக்காக இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய முன்பதிவு, சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்