பாஜக ஆட்சி மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் - செல்வப்பெருந்தகை பேட்டி
உள்நாட்டு முதலீட்டாளர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பாஜகஆட்சி மீது நம்பிக்கை இழந்துள்ளனர் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்
சென்னை,
சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
கச்சத்தீவு குறித்து அண்ணாமலை வெளியிட்ட ஆவணம் போலியானது. இதுவரை அண்ணாமலை வாய் திறக்கவில்லை. குற்றம் புரிந்துள்ளார்கள் என்பதால் வாய் திறக்கவில்லை. பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்கள் அனைவரும் தற்போது தங்கள் பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். வரலாறு காணாத வகையில் ரூ.7 லட்சத்து 60 கோடி நஷ்டம் ஏற்பாட்டாலும் பரவாயில்லை என விற்றுள்ளார்கள். உள்நாட்டு முதலீட்டாளர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த ஆட்சி மீது நம்பிக்கை இழந்துள்ளனர்
தோல்வி பயத்தால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை மூடிவிடும் என பாஜகவினர் பேசி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி ராமரையும் வணங்கும், பாபரையும் வணங்கும். என கூறினார்.