ராமஜெயம் கொலை வழக்கில் 30 பேரிடம் விசாரணை; ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்

தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி நடைபயிற்சி சென்ற போது மர்ம மனிதர்களால் கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-11-14 15:28 GMT

சென்னை,

தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி நடைபயிற்சி சென்ற போது மர்ம மனிதர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை முதலில் சி.பி.சி.ஐ.டி., போலீசாரும், பின்னர் சி.பி.ஐ.யும் விசாரித்தும், குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியவில்லை.

இதையடுத்து இந்த வழக்கை மீண்டும் தமிழ்நாடு போலீஸ் விசாரணைக்கே மாற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ராமஜெயத்தின் மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, தூத்துக்குடி முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மதன், சென்னை சி.பி.ஐ.,-யை துணை போலீஸ் சூப்பிரண்டு ரவி ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து, ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம். நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது என்று போலீஸ் தரப்பு வக்கீல் கூறினார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, விசாரணை நிலை குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 21-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்