கரூர் மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு குழுவினர் ஆய்வு

கரூர் மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2023-02-02 18:30 GMT

கரூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ராமராஜ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க துணை இயக்குனர் பூவிதா ஆகியோர் தலைமையில், வாங்கல் அரசு ஆரம்ப சுகாதார மைய மருத்துவர் மோனிகா ஆர்த்தி, குளோபல் சமூக நல பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் சொக்கலிங்கம், மாவட்ட கல்வி அலுவலக துணை ஆய்வாளர் ஜெயராம் ஆகியோர் கொண்ட மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு குழுவினர் கரூர் மண்மங்கலம், செம்மடை பகுதியில் உள்ள டெக்ஸ்டைல்ஸ், ஸ்பின்னிங் மில்ஸ், கார்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர் மற்றும் வளரினம் பருவ தொழிலாளர்கள் வேலை செய்கிறர்களா? என்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, குழந்தை தொழிலாளர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினர் எவரும் பணி புரியவில்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும், குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துவது கண்டறியப்பட்டால் உரிய நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆய்வின்போது பணிபுரிந்த வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களை http://labour.tn.gov.in/ism என்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேலை அளிப்பவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்