மானியத்துடன் வங்கி கடன் பெற பயனாளிகளுக்கு நேர்காணல்

மானியத்துடன் வங்கி கடன் பெற பயனாளிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது.

Update: 2023-03-14 18:17 GMT

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நபர்களுக்கு பொருளாதார முன்னேற்ற திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் வங்கி கடன் பெற கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் பயனாளிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது. தாட்கோ திட்டத்தின் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நபர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் வங்கி கடன் உதவிபெற கரூர் மாவட்டத்தில் தனிநபர் வங்கி கடன் வழங்குவதற்கான நேர்காணலில் 43 பேர் கலந்து கொண்டனர். இந்த நேர்காணலில் கறவை மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, சிறு பால்பண்ணை, டிராக்டர், விவசாயிகளுக்கு மின் பம்புசெட், வேளாண் இடுபொருட்கள், தையல் தொழில், பெட்டிக்கடை, சிறுதொழில், பயணியர் வாகனம், ஆட்டோ, அழகு நிலையம், பன்றி வளர்ப்பு (வெண்பன்றி), கனரக வாகனம் போன்ற தொழில் செய்வதற்கு பயனாளிகள் விண்ணப்பித்திருந்தார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்