கிராம உதவியாளர்கள் பணியிடத்திற்கான நேர்காணல்
அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர்கள் பணியிடத்திற்கான நேர்காணல் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த 4-ந் தேதி அன்று நடைபெற்றது. அரக்கோணம் தாலுகாவில் தக்கோலம், வேடல், செம்பேடு, பரமேஸ்வரமங்கலம், கடம்பநல்லூர் உள்ளிட்ட 9 இடங்களுக்கான கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 1,351 பேர் அரக்கோணத்தில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். இதில் தேர்ச்சி பெற்ற 981 பேருக்கான நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்று வருகிறது. காலையில் 45 பேரும் மாலையில் 45 பேரும் என இரு பிரிவுகளாக தினமும் 90 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது.