ஓய்வூதியதாரர்களுக்கான நேர்காணல்
கருவூல அலுவலகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.;
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலத்தில் ஓய்வூதியர்களுக்கான வாழ்நாள் சான்று குறித்த நேர்காணல் நடைபெற்றது. இந்த நேர்காணலுக்கு ஏராளமான ஓய்வூதியதாரர்கள் வந்திருந்தனர். ஒவ்வொருவராக நேர்காணல் செய்யப்பட்டது. ஏராளமானவர்கள் வந்திருந்ததால் போதிய இருக்கை வசதி இல்லை. எனவே அவர்கள் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். பலர் நீண்ட நேரம் நின்றிருந்தனர். இதுகுறித்து கருவூல அதிகாரிக்கு புகார் சென்றது. அதைத்தொடர்ந்து அங்கு அவர்கள் அனைவரும் அமர இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டது. ஓய்வூதியதாரர்கள் கூறுகையில், இங்கு ஏராளமான ஓய்வூதியதாரர்கள் வருகின்றனர். அவர்களுக்கு தேவையான இருக்கை வசதி, மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும். பலருக்கு ரத்த அழுத்தம், நீரழிவு நோய்கள் உள்ளது. மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றனர்.