நேர்காணல்
நடப்பாண்டிற்கான நேர்காணலில் ஓய்வூதியர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்ட கருவூலம் மற்றும் சார் கருவூலங்கள் மூலமாக ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான 2023-ம் ஆண்டிற்கான நேர்காணல் கடந்த ஜூலை மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை நேர்காணலில் கலந்துெகாள்ளாத ஓய்வூதியர்கள் கருவூலங்கள் மூலமாகவோ, இந்திய அஞ்சல் துறை அஞ்சலக ஊழியர்கள் மூலமாகவோ அல்லது அரசு இ-சேவை மையங்களின் வழியாகவோ நடப்பு ஆண்டுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.