சர்வதேச பூமி தின கருத்தரங்கு

கோத்தகிரியில் சர்வதேச பூமி தின கருத்தரங்கு நடைபெற்றது.

Update: 2023-04-22 18:45 GMT

கோத்தகிரி, 

சர்வதேச பூமி தினத்தையொட்டி 'பூமியின் மீது முதலீடு செய்வோம்' என்ற தலைப்பில் கோத்தகிரி லாங்வுட் சோலையில் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கோத்தகிரி வனச்சரகர் சிவா தலைமை தாங்கினார். இதில் லாங்வுட் சோலை பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே.ஜே.ராஜு கலந்து கொண்டு பேசினார். வனவர் விவேகானந்தன், தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன், ஆசிரியர்கள் ஆனந்தன், ராஜ்குமார் ஆகியோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசினர். இதில் குண்டாடா அரசு பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். லாங்வுட் சோலை பகுதியில் சோலை மர நாற்றுகள் நடவு செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்