சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை,
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது;
"தன்னம்பிக்கையும் உழைப்பும் கொண்டு சமூகத்தில் சுடர்விட்டு ஒளிரும் மாற்றுத்திறனாளித் தோழர்கள் அனைவருக்கும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துகள். சமூகச் சமத்துவமும் சுயமரியாதையும் போற்றி, உங்களது வாழ்வு உயர நம் கலைஞர் வழியில் உங்கள் திராவிட மாடல் அரசு தொடர்ந்து பாடுபடும்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.