அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப சர்வதேச மாநாடு அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப சர்வதேச மாநாட்டை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.

Update: 2022-06-26 16:57 GMT

சிதம்பரம், 

தகவல் தொழில்நுட்ப மாநாடு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல் மற்றும் உயிர் தொழில் நுட்பயில் துறை சார்பில் மருந்து கண்டுபிடிப்பு, வளர்ச்சியில் உயிர் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சர்வதேச மாநாடு பல்கலைக்கழக டெக் பார்க் வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு உயிர் வேதியியல் மற்றும் உயிர் தொழில்நுட்பவியல் துறை இணைப்பேராசிரியர் பொ. ஸ்டேன்லி மெயின்சென் பிரின்ஸ் தலைமை தாங்கினார்.

அறிவியல் புல முதல்வர் வி.ராமசாமி வரவேற்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன் தொடக்க உரையாற்றினார். மலேசியா தேசிய மருத்துவ பல்கலைக்கழக இயக்குநர் கே.பழனிசாமி சிவனாண்டி, பதிவாளர் கே.சீத்தாராமன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். சிறப்பு அழைப்பாளராக தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டி.மனோ தங்கராஜ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

நான் முதல்வன் திட்டம்

அப்போது அவர் பேசுகையில், தொழில்நுட்பம் சூழப்பட்ட உலகில் வாழ்ந்து வருகிறோம். எதிர்காலத்தில் தொழில்நுட்பத்துடன் வாழ பழகி கொள்ள வேண்டும். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஆலோசனை வழங்கப்பட்டு எதிர்காலத்தில் எந்த வேலைக்கு, எந்தவிதமான ஆற்றல் தேவை என பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.

விழாவில் துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் ஹெச்.பாக்கியராஜ், பேராசிரியர் நளினி, மக்கள் தொடர்பு அலுவலர் ரத்தினசம்பத், பல்கலைக்கழக புல முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்