இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடியில் இருந்து கோவை சென்றது
வாலாஜாரோடு ரெயில் நிலையத்தில் நடந்த பராமரிப்பு பணி காரணமாக இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடியில் இருந்து கோவை சென்றது.
வாலாஜாரோடு ரெயில் நிலையத்தில் நடந்த பராமரிப்பு பணி காரணமாக இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடியில் இருந்து கோவை சென்றது.
பராமரிப்பு பணி
இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் கோவை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வரை செல்லும்.
இந்த நிலையில் வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தில் என்ஜினியரிங் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் நேற்று ஒரு நாள் மட்டும் கோவையில் இருந்து சென்னை சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
பஸ்கள் மூலமாக
இதனால் காட்பாடி ரெயில் நிலையத்தில் இறங்கிய பயணிகள் பஸ்கள் மூலமாக சென்னைக்கு சென்றனர்.
இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்ததால் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பகல் 2.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை - கோவை ரெயில், காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.
பயணிகள் அவதி
இதேபோல கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் ரெயிலும், அரக்கோணத்தில் இருந்து கன்டோன்மென்ட் செல்லும் ரெயிலும் நேற்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டது.
இதனால் அரக்கோணம் செல்லும் பயணிகள் அவதி அடைந்தனர்.