கிரிவலப்பாதையில் தீவிர வாகன சோதனை

கஞ்சா ஒழிப்பு நடவடிக்கையாக கிரிவலப்பாதையில் தீவிர வாகன சோதனை செய்யப்பட்டது.

Update: 2022-08-23 14:39 GMT

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கள்ளத்தனமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதைத்தொடர்ந்து கிரிவலப்பாதையில் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மொபட் மற்றும் காரின் ரகசியமாக கஞ்சா கொண்டு விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்து உள்ளது.

அதனால் கிரிவலப்பாதையில் குற்ற செயல்களை தடுக்க நேற்று 5 மோட்டார் சைக்கிள் ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன் இன்று கிரிவலப்பாதையில் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கையாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த கார் மற்றும் மொபட் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. இதனால் கிரிவலப்பாதை பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்