காட்டேரி பூங்காவை தயார்படுத்தும் பணி தீவிரம்

காட்டேரி பூங்காவை தயார்படுத்தும் பணி தீவிரம்

Update: 2023-02-25 18:45 GMT

குன்னூர்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை வழியாக வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி குன்னூரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டேரியில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் மனதை மயக்கும் மலர் செடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. மேலும் இயற்கை காட்சிகளும் நிறைந்து உள்ளது. இதனால் காட்டேரி பூங்காவிற்கு வந்து செல்ல சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்தில் நிலவும் முதல் கோடை சீசனுக்காக காட்டேரி பூங்காவில் புதிய மலர் நாற்றுக்கள் நடவு பணி மேற்கொள்ளப்படும். அதன்படி இந்த ஆண்டு வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் முதல் சீசனுக்கு புதிய மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணிக்கு நிலத்தை தயார் செய்யும் பணி நடந்தது. தொடர்ந்து அலங்கார செடிகளை நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம்(மார்ச்) முதல் வாரத்தில் புதிய மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணி நடைபெற உள்ளது. சுமார் 1½ லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளது என்று தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்