சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரம்

வத்தலக்குண்டுவில், சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-03-15 17:23 GMT

வத்தலக்குண்டு நகருக்குள் சாலைகள் மிகவும் குறுகலாக இருந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதுதவிர சாலையை ஆக்கிரமித்து சிலர் கடைகள் அமைத்திருந்தனர். இதனால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்படி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் வத்தலக்குண்டுவில், மதுரை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. மேலும் காளியம்மன் கோவில் முதல் மஞ்சளாறு பாலம் வரை சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே வத்தலக்குண்டுவில் ஏற்கனவே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட திண்டுக்கல் சாலையை அகலப்படுத்தும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக சாலையோரம் 6 முதல் 8 அடி வரை சாலையை அகலப்படுத்தும் வகையில் பள்ளம் தோண்டி அதில், கற்கள், மண்ணை கொட்டி சமப்படுத்தி வருகின்றனர். இன்னும் ஓரிரு வாரத்தில் சாலை அகலப்படுத்தப்பட்ட பகுதியில் தார்சாலை போடப்பட உள்ளது. இந்த பணியை வத்தலக்குண்டு நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் வீரன், உதவி பொறியாளர் தாமரைமாறன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்