இன்சூரன்ஸ் முகவர்கள் ஆர்ப்பாட்டம்

ஆத்தூரில் இன்சூரன்ஸ் முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-09-05 20:15 GMT

ஆத்தூர்:-

ஆத்தூர் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு இன்சூரன்ஸ் முகவர்கள் சங்கம் சார்பில் நேரடி முகவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும், முகவர் நலநிதி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் கணேசன், மூத்த முகவர்கள் குணசேகரன், முத்துவீரன், அழகேசன், ஈஸ்வரி உள்பட 75-க்கும் மேற்பட்ட முகவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்