ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது
கோவில் கலைநிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
கோவில் கலைநிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
ரூ.5 ஆயிரம் லஞ்சம்
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் (வயது 50). இவரிடம் தச்சனேந்தல் கிராமத்தை சேர்ந்த செந்தூர் செல்வன் (55) என்பவர் கோவில் திருவிழாவிற்கு கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஒலிபெருக்கி ஏற்பாட்டிற்கு அனுமதி கேட்டார்.
அப்போது இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செந்தூர் செல்வன், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்களது அறிவுறுத்தலின் பேரில் ரசாயன பொடி தடவிய பணத்துடன் செந்தூர் செல்வன் நரிக்குடி போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.
இன்ஸ்பெக்டர் கைது
அப்போது அவர் ரூ.5 ஆயிரத்தை இன்ஸ்பெக்டர் ராமநாராயணனிடம் கொடுத்தார். அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சால்மன் துரை ஆகியோர் அதிரடியாக போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து இன்ஸ்பெக்டர் ராமநாராயணனை கையும், களவுமாக பிடித்து அவரிடம் இருந்த லஞ்ச பணத்தை கைப்பற்றினர்.
இன்ஸ்பெக்டர் ராமநாராயணனை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இந்த நடவடிக்கை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.