சாலை பணிகளை உள் தணிக்கை குழுவினர் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் சாலை பணிகளை உள் தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2023-05-18 19:33 GMT

தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலை துறை சார்பில் கடந்த நிதியாண்டில் நடைபெற்ற சாலை மற்றும் பாலப்பணிகளை உள் தணிக்கை குழுவினர் கடந்த 10-ந் தேதி முதல் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலம் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்யும் பணி நேற்று நடந்தது. சென்னை திட்டங்கள் அலகு கோட்ட பொறியாளர் அருணா தலைமையில் உதவி கோட்ட பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வினை மேற்கொண்டனர்.

இந்த குழுவினர் அரியலூர்- செந்துறை நான்கு வழிச்சாலை, செந்துறை- மாத்தூர், செந்துறை- நக்கம்பாடி காடூர், டி.சோழன் குறிச்சி சாலைகளை ஆய்வு செய்தனர். இதில் புதிதாக போடப்பட்ட சாலையின் தரம், அளவுகள், பாலப்பணிகளின் தரம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு ஆலோசனைகளை வழங்கினர். இந்த ஆய்வின் போது அரியலூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் உத்தண்டி, விழுப்புரம் சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் ஸ்ரீகாந்த், உதவி கோட்ட பொறியாளர்கள் சிட்டிபாபு, ராஜா.கருணாநிதி மற்றும் உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்