விசுவக்குடி அணையில் பொதுப்பணித்துறை அதிகாரி ஆய்வு

விசுவக்குடி அணையில் பொதுப்பணித்துறை அதிகாரி ஆய்வு செய்தனர்.

Update: 2023-10-07 17:33 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் ஊராட்சியில் விசுவகுடி அணை உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் பச்சமலை பகுதியில் பெய்த மழையினால் இந்த அணைக்கு குறைந்த அளவு நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 23 அடியாக உள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் அணையின் ஷட்டர்கள் முறையாக இயங்குகின்றனவா? என பொதுப்பணித்துறை கோட்ட பொறியாளர் வேல்முருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஷட்டர்களை ஏற்றி, இறக்கக்கூடிய கிரேன் இரும்பு கயறுகளில் கிரீஸ் போடப்பட்டுள்ளனவா? என பார்வையிட்டு அதனை முறையாக பராமரிக்க வேண்டும் என அணை பராமரிப்பாளர்களிடம் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர்கள் மருதமுத்து, தினகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்