பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

ஜலகண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-06-15 17:49 GMT

வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் வருகிற 25-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கினார். உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் ஜலகண்டேஸ்வரர் கோவில் தர்ம ஸ்தாபனம் தலைவர் கலவை சச்சிதானந்தா சுவாமிகள், செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் ரமேஷ்குமார், உப தலைவரான தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத் தலைவர் வெங்கடசுப்பு, கும்பாபிஷேக தலைவர் சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கும்பாபிஷேகத்தன்று பக்தர்களின் வருகை மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து கும்பாபிஷேகம் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளையும், அதற்கான முன்எச்சரிக்கை ஏற்பாடுகளையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது துர்கா பவன் உதயசங்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்