வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

சீர்காழி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-09-08 18:08 GMT

சீர்காழி:

சீர்காழி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வளர்ச்சி திட்ட பணிகள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அகனி ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து தென்னங்குடி குளம் சீரமைக்கும் பணி மற்றும் சொக்கன்குளம் பகுதியில் காங்கிரீட் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கலெக்டர் ஆய்வு

தொடர்ந்து ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் கட்டப்படும் வீடுகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் நிம்மேலி ஊராட்சிக்குட்பட்ட ஆலஞ்சேரி கிராமத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டார். பின்னர் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு சமைத்து வைக்கப்பட்ட உணவினை கலெக்டர் ஆய்வு செய்து தரமாகவும் சுகாதாரமும் உணவு வழங்க அறிவுறுத்தினார். பின்னர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தார்.விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை அரசு நிர்ணயம் செய்த எடை அளவில் கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

தரமான அரிசி

அப்போது பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் ரேஷன்கடைகள் மூலம் தரமான அரிசி வழங்க வேண்டும் என கோரிக்கை எடுத்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன், ஒன்றிய பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை, ஊராட்சி மன்ற தலைவர்கள் மதியழகன், வசந்தி கிருபாநிதி, ஒப்பந்தக்காரர் ராஜதுரை, ஊராட்சி செயலாளர்கள் வீரமணி, ஆரோக்கியமேரி உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்