எண்ணெய் கசிவு அகற்றும் பணிகளை பார்வையிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

மத்திய, மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு எண்ணெய் கழிவுகளை அகற்றுவது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.;

Update:2023-12-15 15:02 IST

சென்னை,

எண்ணூர், புயல் காரணமாக பெய்த பலத்த மழையின்போது தொழிற்சாலையில் இருந்து கச்சா எண்ணெய் கழிவுகள் மழைநீருடன் கலந்து பக்கிங்காம் கால்வாய் வழியாக தாழ்வான பகுதிகளில் படிந்துள்ளது. இந்த கழிவுகள் கொசஸ்தலை ஆற்று நீரில் கலந்து, எண்ணூர் கடலிலும் கலந்ததால் 20 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடலில் கச்சா எண்ணெய் கழிவுகள் படிந்து காணப்படுகிறது.

இதுகுறித்து பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. கடலோர காவல் படையினர் எண்ணெய் கழிவுகளை அழிப்பதற்காக ரசாயன பொடிகளை கடலில் தூவி உள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு எண்ணெய் கழிவுகளை அகற்றுவது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று எண்ணூர் பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவு அகற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்/ கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்