ஆக்கிரமிப்பு இடங்களை அகற்ற மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

ஆக்கிரமிப்பு இடங்களை அகற்ற மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2022-09-27 17:49 GMT

ஜோலார்பேட்டை

ஆக்கிரமிப்பு இடங்களை அகற்ற மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.

நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட சமயானூர் ஏரிக்கு வரும் கால்வாய் பகுதி புறம்போக்கு இடத்தில் 25 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். கடந்தர சில மாதங்களாக ஐகோர்ட்டு உத்தரவின்படி தமிழகம் முழுவதும் புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ள இடங்களை வருவாய் துறையினர் அகற்றி வருகின்றனர் அதன்படி சமயானூர் ஏரி புறம்போக்கு இடத்தில் உள்ள 23 வீடுகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையொட்டி திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி நேற்று காலை ஏரி புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அப்போது 14 வது வார்டு பேரூராட்சி கவுன்சிலர் இல. குருசேவ் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கூறுகையில், இங்கு குடியிருப்பவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றார் இந்த வீடுகளை அகற்றுவதற்கு முன்பு அவர்களுக்கு வீடும், அதற்குரிய பட்டாவை வழங்க வேண்டும் என்றார்.

ஆய்வின் போது நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார் கிராமம் நிர்வாக அலுவலர் ராஜலட்சுமி மற்றும் அரசு பணியாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்