கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு

கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு செய்தாா்.

Update: 2022-11-11 18:45 GMT


கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு நேற்று, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன் திடீரென வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள வழக்கு குறித்த ஆவணங்கள், நீதிமன்ற வழக்குகளின் கோப்புகள் மற்றும் எத்தனை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, முடிக்கப்பட்ட வழக்குள் குறித்தும் கேட்டறிந்தார்.

அதோடு நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தினார். மேலும் போக்சோ வழக்குகள் சம்பந்தமாக ஆய்வு மேற்கொண்டு அந்த வழக்குகளின் விபரங்கள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்