திருச்சி அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
திருச்சி அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தி.மு.க. டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராம்ஜி நகரில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தந்தார்.
இந்த நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சியில் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், திருச்சி பெரிய மிளகுபாறை நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.