தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில் நடைபெற்று வரும் சாலை பணிகளை கோட்டப்பொறியாளர் சரவணன் ஆய்வு செய்தார். இதில் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, –நாட்ராம்பாளையம் சாலை பகுதியில் இருவழி சாலையாக மாற்றும் பணியை அவர் ஆய்வு செய்தார். ஆய்வில் நவீன துளையிடும் கருவி மூலம் சாலையின் நீளம், அகலம் மற்றும் இதர தரக்கட்டுப்பாடு பரிசோதனைகளை செய்தார். இந்த ஆய்வின் போது உதவி கோட்டப்பொறியாளர் திருமால்செல்வன், இளநிலைப்பொறியாளர் டேவிட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.